சேமித்து வைத்த பெற்றோல் மாணவி உயிரிழப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சுவாமி அறையில் விளக்கேற்றியபோது பெற்றோல் கலன் தீப்பற்றியதால் பாடசாலை மாணவி ஒருவர் எரிந்து பலியானார்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இந்தத் துயர சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02 மே) மாலை இடம்பெற்றுள்ளது.

மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றுவரும் மாணவியான சுதர்சன் சுதர்சிகா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு உடல் கருகி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியால் பெற்றோலை வாங்கிய வீட்டார் சுவாமி அறையில் சேமித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் சுதர்சிகா சுவாமி படத்துக்கு விளக்கேற்றி விட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார். அது, அணையாத நிலையில் சுவாமி தட்டுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கலனில் விழுந்துள்ளது. தீக்குச்சி பட்டதும் அது தீப்பற்றி மாணவி மீதும் தீப்பிடித்ததாகக் கூறப்படுகின்றது.

இளவாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article