இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத் மனித புதைகுழியை பார்வையிட தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தில், ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள், இரண்டு பணிப்பாளர்கள் மற்றும் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் இவர்கள் கலந்துரையாடுவார்கள் எனவும், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் அபிவிருத்தி நிலைய பிரதிநிதிகளுடனும் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.