செப்டெம்பர் 15 இல் கூட்டங்கள், பிரசாரங்களில் ஒலிபெருக்கி தடை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புலமைப்பரிசில் பரீட்சை – 2024 நடைபெறவுள்ளதால் எதிர்வரும் செப்டெம்பர்15 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணிவரை கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல்பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாமென பரீட்சைகள் திணைக்களம்கோரிக்கைவிடுத்துள்ளது.

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில்எதிர்வரும் 15ஆம் திகதி காலை நடைபெறும். இதில், 323,879 பரீட்சார்த்திகள்பரீட்சையில் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article