சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையமும் தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக்கழகமும் இணைந்து நடத்திய தீவக அணிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டி மற்றும் உள்ளுர் போட்டிகளான கரப்பந்தாட்டப்போட்டி மற்றும் கடல்சார் போட்டிகளான நீந்தல் போட்டி ,படகு வலித்தல் போட்டி ஆகியவற்றின் பரிசில் வழங்கல் நிகழ்வு.

துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டு கழகம் , ஊர்காவற்றுறை அண்ணா விளையாட்டுக்கழக்கம் ஆகிய அணிகள் மோதிய நிலையில் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டு முதலாம் இடத்தினையும் ஊர்காவற்றுறை அண்ணா விளையாட்டுக்கழக அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Share this Article