செட்டிகுள பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

செட்டிகுள பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி.
நவ.23
இன்று  நவ.23 வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஆளும் தரப்பால் மீண்டும்  சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்காக சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் படி வாக்கெடுப்பில் இரண்டு மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது.

குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி  ஆகிய கட்சிகளினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு உறுப்பினர்களும் எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது உறுப்பினர்களும் வாக்களித்ததோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதன் படி இரண்டு மேலதிக வாக்குகளால் குறித்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சமர்ப்பிக்கப்பட்ட பாதீடும் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article