சுற்றுலா வந்த பெண்ணுடன் சேட்டை; 9 இளைஞர்களுக்கு ஒத்திவைத்த சிறை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்தது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தவிட்டுள்ளது. 

 

ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகருக்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரின் நண்பரும் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த பகுதிக்கு செப்டம்பர் 24 ஆம் திகதி  சென்றுள்ளனர்.

அப்போது அங்கு, மது போதையில் இருந்த இளைஞர்கள் அவர்களை தகாத வார்த்தையால் பேசி, பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தனர் என்ற அடிப்படையில் 13 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையும், நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் குற்ற வாளிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்து, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் அபராதம் செலுத் துமாறும் நஷ்டஈட்டை கட்டத்தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனையும், அபராத பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் மற்றும் 7ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதிவான், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1500 ரூபாய் வீதம் 7 பேருக்கும் தண்டம் விதித்துடன், 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும், நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்தார்.


Share this Article