சுற்றுலாவிகளுக்கு வளைகுடா நாடுகள் வழங்கும் சலுகைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி சுற்றுலாப் பயணிகள் GCC நாடுகள் முழுவதும் ஒரே ஒரு சுற்றுலா விசாவில் பயணிக்க முடியும்.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற நாடுகளுக்கு இடையே பயணிகள் எந்த சிரமமும் இன்றி எளிதாக செல்ல அனுமதிக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலா விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவிற்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) ஒப்புதல் வழங்கியுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் 40ஆவது உள்துறை அமைச்சர்களின் கூட்டம் ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் GCC அமர்வின் தலைவர் சயீத் ஹமூத் பின் பைசல் அல் புசைடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

GCC நாடுகள் ஒருங்கிணைந்த சுற்றுலா விசா முறையை ஒருமனதாக அங்கீகரித்துள்ளன.

ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த விசா முறை 2024 -25ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒருங்கிணைந்த விசா முறையின் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share this Article