சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டுநினைவுநாள் இன்றைய தினம் (செப்.02) யாழ். ஊடக அமையத்தில்உடம்பெற்றது.
ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை யாழ். தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் த. வினோஜித் ஏற்றி வைத்ததை அடுத்து, பிரகாஷின் பெற்றோர் மற்றும்சகோதரர்கள் மலர் மாலை அணிவித்ததுடன் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள்மலரஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நிகழ்வில் கலந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்த.சித்தார்த்தன் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன்உள்ளிட்டோரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து, யாழ் ஊடகவியலாளர்களின் மருத்துவதேவைகளுக்காக குடும்பத்தினரால் ஒரு லட்சம் ரூபா பணம் ஊடக அமையநிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷ் கொரோனோதொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 02அன்று தனது 26ஆவது வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.