இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறும் என்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளன. அதன்பின்னர் பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் கலாசார மத்திய நிலையத்தின் முழுமையான செயற்பாட்டு நிகழ்வுடன், சுதந்திர தின நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று (டிசம்பர் 28) நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.