சிவ சேனை தொண்டர்கள் சுயேட்சை குழுவாக களத்தில் – சிவசேனை தலைவர்தெரிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சைவ சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கோரி சிவ சேனைதொண்டர்கள்  சுயேட்சை குழுவாக  களமிறங்கியுள்ளதாக ஈழ சிவசேனைதலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (நவம்பர் 07) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், வரலாற்று தொன்மையான சைவ சமயத்திற்குமுன்னுரிமை அளிக்காமல் புத்த சமயத்திற்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கலாம். மதமே இந்த நாட்டை கெடுக்கிறது. புத்த மதத்துக்கு மாத்திரம் முன்னுரிமைகொடுக்காமல் சைவ சமயத்துக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும் – என்றார்.

மதமாற்ற தடைச் சட்டம், பசு வதைச் சட்டம் உள்ளிட்ட விடயங்களைஅமுல்படுத்தவும் சிவசேனையால் வலியுறுத்தப்பட்டது.

ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் ந.புகன்ஶ்ரீந்திரனை முதன்மை வேட்பாளராககொண்டு ஆமைச் சின்னத்தில் சிவசேனை அமைப்பு சுயேட்சையாகபோட்டியிடுகின்றது.

Share this Article