சிறப்பாக நடைபெற்ற நெடுந்தீவு இளைஞர் கழக விளையாட்டு நிகழ்வு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று (ஒக்.17) சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் அ. புஸ்பகுமார் தலைமையில் இன்று பி.ப. 2.30 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் நடராஜா பிரபாகரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் அவர்களும் மற்றும் விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இறுதி நாள் நிகழ்வின் சிறப்பு உதைபந்தாட்டப் போட்டியாக சென் ஜோண்ஸ் இளைஞர் கழகம் எதிர் சென் ஜேம்ஸ் இளைஞர் கழகம் என்பன மோதிக்கொண்டன. இதன்போது 2:0 எனும் கோல் கணக்கில் சென் ஜோண்ஸ் இளைஞர் கழகம் வெற்றியீட்டியது.

ஏற்கெனவே நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர் கழகங்களுக்கான சான்றிதழ்கள், நினைவுக் கிண்ணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article