நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக்.09) வித்தியாலய உள்ளக அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்து மாணவர் மன்றத்தின் தலைவர் தி.அபிஷன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே.மகிந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது மங்கள ஒளியேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் , வாணி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வின்போது இந்துமத குரு கா. புவனேந்திரசர்மா, வித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை சோபன் றூபஸ் அடிகளார் மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
.