நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக். 07) நவரட்ணசிங்கம் கலை அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.
உயர்தரமாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் தலைவர் அ. அமல அஜீவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு நிகழ்வு அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது மங்கள ஒளியேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன், ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வின்போது வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் ஆசிரியரகள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.