நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் , வித்தியாலய தினம் கடந்த புதன்கிழமை (ஓகஸ்ட் 06) சிறப்பான முறையில் கொண்டாப்பட்டது.
வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு விழா மண்டபத்தில் சிறப்பு ஒளியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
வித்தியாலய தினம் கடந்த ஜூலை 26 ஆக இருந்தபோதும் இன்றைய தினத்தில் கொண்டாடுவதற்கு பொருத்தமான சூழல் இன்மையாலும் , இரண்டாம் தவணைப் பரீட்சை இடம்பெற்றதாலும் பாடசாலைத் தினம் ஓகஸ்ட் 06 புதன்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.