சிரேஷ்ட எழுத்தாளர் புலனாய்வு ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 76 வது வயதில் காலமானார் சிறிது காலம் இவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம்(ஜனவரி19) காலமானார்.
1980 களின் முற்பகுதியில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட “ராவய“எனும் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர் அக்காலக் கட்டத்தில் பாதுகாப்பு அரசியல் ,பாதாள, கொலை ,கொள்ளை உட்பட அனைத்துசர்ச்சைக்குரிய துறைகளின் புலனாய்வு தகவல்களை வழங்கும் ஒரே பத்திரிகையின் தனி அதிகாரம் மிக்க ஆளுமையாக பேசப்பட்டார்..
பல்வேறு அரசியல் கிரகங்களின் நூலாசிரியரான இவர் அரசியல் பொருளாதாரம் சமூக கலாசார ரீதியாக இடதுசாரி சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த பாடுபட்டவர்.
தற்போது அதிகாரத்தில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்துஅக்கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்
இவர் சிங்களத்தில் எழுதிய 1971 கருல்ல நொநிம், அரகலய சௌர, ரஜின தேஷபாலனய, பௌல ஹா குலய போன்ற நூல்கள் இலங்கை அரசியல் வரலாற்றின் புதிய பரிமாணங்கள்ஏற்படுவதற்கு வழி வகுத்த நூல்களில் சிலவாகும்
சிங்கள எழுத்து இலக்கிய ஊடகத்துறையின் முன்னோடியான இவரது மறைவு தேசத்துக்கு ஒரு பேரிழப்பாகும்.