சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் மறைவு !

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் பிரதமஆசிரியரும் வீரகேசரி வட பிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்தஊடகவியலாளர் இராசநாயகம் பாரதி அவர்கள் நேற்றையதினம் (பெப். 09) தனது 63ஆவது வயதில் காலமானார். 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட பாரதி 1980களில் “ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் “முரசொலி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் பணியாற்றியநிலையில், கொழும்பை வதிவிடமாக்கிக் கொண்ட காலப்பகுதியில் “வீரகேசரி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 

1997ஆம் ஆண்டு “தினக்குரல்” பத்திரிகை தோற்றம் பெறவே அதில் தன்னைஇணைத்துக்கொண்ட பாரதி, “ஞாயிறு தினக்குரல்” பத்திரிகையின் பிரதமஆசிரியராக 2021ஆம் ஆண்டு வரை பணிபுரிந்ததுடன் தினக்குரல் ஒன்லைன்ஆசிரியராகவும் இருந்தார். 

பின்னர், மீண்டும் தனது மண்ணுக்குத் திரும்பிய பாரதி, “ஈழநாடு” பத்திரிகையின்பிரதம ஆசிரியராகப் பணியாற்றியதுடன் தற்போது வீரகேசரியின் வட பிராந்தியபதிப்பின் ஆசிரியராக பணிபுரிந்த வேளையிலேயே காலமானார். 

இவர் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் “ஆர்.பாரதி”, “அபிமன்யு”, “பார்த்தீபன்” ஆகிய பெயர்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்ததுடன் சர்வதேசஊடகங்களுக்கும் அரசியல் கருத்துகளையும் செவ்விகளையும் வழங்கி வந்தவர்ஆவார். 

பல மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஊடக பயிற்சிப்பட்டறைகளிலும்வளவாளராக பாரதி பயிற்சிகளை வழங்கியுள்ளார். 

அதுமட்டுமன்றி, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினரானபாரதி, பின்னர் அதன் தலைவராகவும் செயலாளராகவும் இருந்துள்ளார். 

பாரதியின் பூதவுடல் தற்போது யாழ். திருநெல்வேலியில் உள்ள அன்னாரின்இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

எழுத்தில் நேர்மையையும் பத்திரிகைப் பணியில் உயர் அர்ப்பணிப்பையும்கொண்டு செயலாற்றிய பாரதி இராசநாயகத்தின் மறைவுக்கு பல்வேறுதரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Share this Article