பொலநறுவையில் இருந்து வருகை தந்து யாழ் சித்த மருத்துவ பீடத்தில் கற்பதற்காக வருகை தந்து காய்சல் காரணமாக நோயாளர் காவு வண்டி மூலமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவியிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சித்த மருத்துவ பீட மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.ஆர்.கேதிஸ்வரன் அவர்கள் தெரிவித்தார் இதே நேரம் கிளிநொச்சி வளாகத்தில் இருந்து வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவிக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.