பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை 50,000 ரூபாவுக்கு விற்ற தாய் கைது!
*பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்த இளம் தாய்.நேற்று மாலை அனுராதபுரத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் விற்பனை செய்ய உதவிய தாதி ஒருவரின் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.*
குறித்த பெண்ணுடன் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரையும், குழந்தையின் தந்தை, அரசாங்க வைத்தியசாலையின் தாதி, வைத்தியசாலையின் உதவியாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மேலும் பலரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.*
மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவருடன் ஒன்றாக வசித்து வந்த கெபிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.*
பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.*
தமக்கு ஒன்றரை வயது மகனும் இருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்