சிகரெட் விலை ரூ. 5ஆல் உயர்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சிகரெட்டின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ‘கோல் லீவ்’ சிகரெட் ஒன்றின் புதிய விலை 85 ரூபாயாகவும், பென்சன் ரூ ஹெட்ஜஸ்’ சிகரெட்டின் புதிய விலை 90 ரூபா யாகவும் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டம் நேற்று முன்தினம் (01 ஒக்ரோபர்) முதல் அமுல்படுத்தப்படுவதே சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படுவதற்கு காரணம் என புகையிலை நிறுவனத்தின் சி

ரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, நிறுவனத்தின் ஏனைய சிகரெட் தயாரிப்புகளான கப்டன், பிரிஸ்டல், துன்கில் போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.


Share this Article