இன்று (ஜனவரி 11) முதல் அமுலாகும் வகையில் சிகரெட் விலையை உயர்த்த இலங்கை புகையிலை நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
கலால் வரி உயர்வை ஒட்டி, சிகரெட் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, நான்கு வகையான சிகரெட்டுகளின் விலைகள் 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளதுடன், dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாய் உயர்த்தப்படும்.
அதே நேரத்தில், இன்று (ஜனவரி 11) முதல் மதுபானங்களின் விலைகளும் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்களின் விலைகள் 6 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.