யாழ் – சாவற்காடு மீன்பிடி துறைமுக பகுதியில் அதிகமாக கடற்பாசி தேங்கியுள்ளதன் காரணமாக, அதை அவசரகால அடிப்படையில் அகற்றிக் கொடுக்க வேண்டுமென மீனவர்கள், நேரில் சென்ற கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை மீனவர்களுக்கு நடைபாதை இல்லாமல் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக கிராவல் மண் போட்டாவது ஒரு நடைமுறை வாய்ந்த நடைபாதை அமைத்து தர வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைத்தனர்.
மீனவர்களின் இந்த வேண்டுகோள்களை கருத்தில் கொண்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளைத் தெரிவித்ததோடு, தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.