வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினையான சாட்டி அண்ணமார் இணைப்பு வீதியை ஊரியிட்டு செப்பனிட்டு மக்களது பாவனைக்கு நேற்று (நவம்பர் 16) திறந்துவிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது நீண்டகாலமாக செப்பனிடப்படாத விழுந்த நிலையில் அப்பகுதி மக்கள் போக்குவரத்தில் பெரும் அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டுவந்தமை எமது சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது அடுத்து சப்ரிகம திட்டத்தினூடாக ஐந்து இலட்சமும் பிரதேச சபையின் இரு உறுப்பினர்களனது ஒதுக்கீட்டிலிருந்து ஐந்து இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் ஊரியிடப்பட்டு தற்போது செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் வைபலரீதியான நிகழ்வு நேற்று (நவம்பர் 16) நடைபெற்றிருந்த நிலையில் குறித்த வீதியை சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி நாடாவெட்டி திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.