உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் போதனைகளில் பங்கேற்று, தற்கொலைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 6 பெண்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்கள் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
பெண் ஒருவரும் அவரது 3 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.