சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஆசிரியர், அதிபர் உட்பட அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை

ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி ஆசிரிய – அதிபர் கூட்டமைப்பு இன்று சம்பள ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தது.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன், ஆசிரியர், அதிபர்களுக்கு மாத்திரமின்றி சகல தரப்பினரதும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வேதன ஆணைக்குழுவிடம் கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்திற்கு, இன்று சம்பள ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர் – அதிபர் சம்பளத்தில் இரண்டாம் கட்டத்தைப் பெறவேண்டி உள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவுமிக்க நிலையில், ஆசிரியர் அதிபர்களின் சம்பளத்தை மாத்திரமின்றி அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரியதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Share this Article