சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தேசிய பொங்கல் விழா சுன்னாகத்தில்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சமுர்த்தி வங்கி சுன்னாகமும் இணைந்து நடாத்தும் தேசிய  பொங்கல் விழா உடுவில் பிரதேச  செயலாளர் திருமதி பிறேமினி  பொன்னம்பலம்  தலைமையில் இன்றையதினம் (06.02) காலை சுன்னாகம் சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் M.G.S.S கித்சிறி அவர்களும், பிரதிப் பணிப்பாளர் (குறுநிதி) மகேஷ் பெர்ணாண்டோ  அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. ஸ்ரீவர்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு கொடிதின சேகரிப்பில்  அதிக நிதியினை சேகரித்த முதல் 06 உத்தியோகத்தர்களுக்கான விருதுகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார  உதவிகள் மற்றும் கடன் நிதி வழங்கல் என்பன பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்களாலும் சிறப்பு  விருந்தினர்களாலும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களும் மற்றும்  சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Share this Article