சனாதிபதி தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்தசெயலமர்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதிதேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்தசெயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சிஅலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 21)  இரண்டுஅமர்வுகளாக நடைபெற்றது.

இதன் போது தலைமையுரையாற்றிய   தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காகநியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுமுகமாகவும், நீதியாகவும்நடைபெற  ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அந்த வகையில்கிராம அலுவலர்களின் பங்களிப்பும் காத்திரமானது எனத் தெரிவித்தார்.

சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில்  கிராமஅலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல்ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இச் செயலமர்வில் மாவட்டத்தின் அனைத்து நிர்வாக கிராமஅலுவலர்கள் மற்றும்கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article