கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி கடலில் சட்டவிரோத முறையில் இறால் பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் இன்று(ஏப்ரல் 19) கைதுசெய்தனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி தொழிலில் ஈடுபட்டமை மற்றும் மடியுடன் கூடிய இழுவை வலையைப் பயன்படுத்தியமை, உள்நாட்டு நீர் நிலைகளில் 85Mm அளவை விட குறைந்த வலையைப் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் தெரிவித்தார்.
குறித்த ஆறு பேரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.