சங்கானை பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (டிசம்பர் 31) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
சங்கானை பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இ. விஜயமோகனராசா கலந்துகொண்டார்.
இதன்போது புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை போன்ற பரீட்சைகளில் சித்தி பெற்ற கூட்டுறவு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கல்வியில் சிறந்து விளங்கும், சங்கத்தின் அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் ப.கேசவதாசன், சங்கத்தின் பொது முகாமையாளர் திருமதி. கிருஷ்ணவேணி, சங்கத்தின் பணிப்பாளர் சபையினர், சங்கானை மக்கள் வங்கி கிளை முகாமையாளர் திரு.ந.தனேஷ், சங்கத்தின் முன்னாள் பணியாளர் ப.கரிகாலன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.பாலகுமார், ஹற்றன் நஷனல் வங்கியின் சங்கானை கிளை முகாமையாளர் என்.பெனற், சங்கத்தின் ஊழியர்கள், சங்கத்தின் அங்கத்தவர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.