கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சைக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் வழங்கிய 100 ஒக்சிஜன் கருவிகள்:
கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாவனைக்காக,
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால்,
100 ஒக்சிஜன் கருவிகள் (Oxygen Concentrators -10 L) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் நேற்று அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் திரு. ஜகத் அபேசிங்க அவர்களினால் இந்த ஒக்சிஜன் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தினால் இந்த 100 ஒக்சிஜன் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உதவியைப் புரிந்திருக்கும் சிங்கபூர் செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு இலங்கை மக்கள் சார்பாக எனது நன்றிகள்.
கௌரவ பிரதமரின் வேண்டுகோளுக்கமைய, எதிர்வரும் வாரங்களிலும், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக மேலும் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதனை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திரு.ஜகத் அபேசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் கையளிக்கப்பட்ட ஒக்சிஜன் கருவிகள், உடனடியாகவே –
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் தொடங்கியது முதல், மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கும் நிவாரணமளிப்பதற்கும் இலங்கை இலங்கை செஞ்சிலுவை சங்கம் பெரும் பங்கினை ஆற்றி வருகின்றது.