கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கா.பொ.த.சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 வரை நடைபெறும் என கூறினார்.