மாவட்டச் செயலகத்தின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலக ரீதியாககொத்தணி அடிப்படையிலான இரத்ததான முகாம் அரசாங்க அதிபரால்ஆரம்பித்து வைக்கப்பட்டது
மாவட்டச் செயலகத்தின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுடன் இணைந்து – ஒவ்வொரு பிரதேசசெயலக ரீதியாக கொத்தணி அடிப்படையில் இரத்ததான முகாம் ஆரம்ப நிகழ்வுநேற்றையதினம் (ஜூலை30) காலை 10.00 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகபிரிவிலுள்ள அச்சுவேலி மத்திய கல்லூரியில் உதவி பிரதேச செயலாளர் எஸ். அபர்ணா தலைமையில் நடைபெற்றது.
இந் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்கஅதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார். இரத்ததான நிகழ்வில் 35 பேர் இரத்ததானம் வழங்கினார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக கொத்தணி அடிப்படையில் இரத்த தானம்வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரத்த தான நிகழ்வுஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேசத்தில்நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.