கோப்பாயில் வாய்த் தர்க்கம் மோதலாக மாறி ஒருவர் கொலை!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கோப்பாயில் இன்று (16/02) மாலை போக்கு வரத்து பாதை தொடர்பில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறி 56 வயதான ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

போக்கு வரத்து பாதை தொடர்பில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறியது. இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக 119 ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கோப்பாய் கல்வியல் கல்லூரி வீதியில் வசிக்கும் 56 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற  கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment