கைத்தடி பகுதியில் உள்ள தோட்டத்தில் அமைந்திருந்த கிணறொன்றிலிருந்து இன்று (ஜனவரி 21) ஒரு சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் கிணற்றில் சிசுவின் சடலம் மிதப்பதை கவனித்ததும், அதனை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாவகச்சேரி பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டு, வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.