இலங்கை கடல் எல்லைக்குள் அடாத்தாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டிருந்த 54 இந்திய மீனவர்களில் 40 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், 3 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி – மன்னார் இடையிலான கடற்பரப்புக்களில் அடாத்தாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 54 இந்திய மீனவர்கள் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்
யாழ்ப்பாணக் கடற்பரப்பில் கைதாகிய 14 மீனவர்களுக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையால் அவர்கள் எதிர்வரும் எட்டாம் திகதி வரை காரைநகர் கடற்ப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்