முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான்குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் எனதெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நேற்றையதினம் ( நவம்பர் 12) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும்,
இம்மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வுதிணைக்களத்திற்கு வரமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின்சனல் 4 ஊடகத்திற்கு அவரது முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானாஉண்மைகளை முன்வைத்தமை தொடர்பான வாக்குமூலத்தை பதிவுசெய்வதற்காகவே இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறுஅவருக்கு அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டுதொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.