குறிகாட்டுவான் துறைமுகத்தில் உள்ள கட்டாக்காலி நாய் ஒன்று இன்றையதினம் (07/12) கடித்ததில் நெடுந்தீவு பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த துறைமுகப் பகுதியில் உள்ள பயணிகள் தங்குமிடம் , மற்றும் சனநடமாட்டம் கூடிய இடங்களில் கட்டாக்காலிகளாக திரிவதுடன் , பயணிக்கும் பயணிகளை அச்சமுட்டும் வகையில் உள்ளமை நீண்டகாலமாக தொடர்கிறது
இந்த நிலையிலேயே இன்றையதினம் மதியம் நெடுந்தீவில் இருந்து வந்த நெடுந்தீவு இளைஞரை காலில் கடித்து காயப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசம் வேலணை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்டதாகையாலும், இப்பகுதி ஊடாக பெருமளவு தீவகமக்கள் மற்றும் சுற்றுலாவிகள் பயணிப்பதனாலும் கட்டாக்காலிகளாக திரியும் நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேலணை பிரதேச சபை நடவடிக்கை எடுக்கவேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.