குறிகாட்டுவான் இறங்குத்துறைக்கு கண்காணிப்பு பயணமொன்றை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மேற்கொண்டிருந்தார். இதேவேளை அப்பகுதியில் இருந்த பயணிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின்கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இதன்போது பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் பயன்பாட்டுக்குஉகந்ததாக அது இல்லை எனவும் சுட்டிக்காட்டிய மக்கள், இதனைசரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கைகளை ஏற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இறங்குத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன் இதற்குரிய ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில்ஆரம்பமாகவுள்ளதாக தெரியவருகின்றது.