குறிகாட்டுவானில் பிடிபட்ட புறாக்கள் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவிலிருந்து கடந்தவாரம் யாழ்நகருக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி புறாக்களும் உரியவர்களிடம் நேற்றையதினம் (18/02) நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவரும் வேறு ஒருவரும் அனுமதி இன்றி புறாக்களை கொண்டு சென்றபோது குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைத்து  ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்றுறை நீதி மன்றில் முற்படுத்தியபோது , குறித்த இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

இவ் வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழித்தட அனுமதி இன்றி கொண்டு சென்றமைக்காக குற்றப்பணம் அறவிடப்பட்டு புறாக்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article
Leave a comment