யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறைக்கு அண்மையில் இன்று (06.03) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இருவர் உயிரிழந்தனர்.


நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் , அதில் குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80) மற்றும் பிரான்ஸிஸ் (வயது 57) மரணமடைந்ததுடன் மேலும் 2 பெண்கள் ஒரு ஆண் என மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் 8 பேர் சாதாரண நோயாளர் சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.