நெடுந்தீவிலும் புலம்பெயர் நாடுகளிலும் குமுதினி படுகொலையின் 37 நினைவுதினம் நேற்று முன்தினம் (மே15) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிலையில் நெடுந்தீவின் ஞாபகச் சின்னமான குமுதினிப்படகு குறிகாட்டுவான் கடல் பகுதியில் முற்றாக மூழ்கும் நிலையில் காணப்படுகின்றமை நெடுந்தீவு மக்களின் மனங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நெடுந்தீவு துறைமுகத்தில் கம்பீரமாக தரித்துநின்று மக்களை சுமந்து செல்லும் குமுதினிப்படகு நெடுந்தீவு மக்களின் நம்பிக்கையான பிரயாணத்துக்கு ஆதாரம்.
இன்றும் மக்களின் வாய்களில் குமுதினிப்படகின் பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
குறித்த படகு பழுதடைந்த நிலையில் பல வருடமாக பராமரிப்பின்றி முற்றாக சிதைவுறும் அவலநிலை காணப்படுகின்றது.
குறித்த படகின் புனரமைப்பு தொடர்பில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதாக அறிவிப்புக்கள் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை நிறுத்துவதற்கான எந்த முயற்சகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறான நிலை தொடர்ந்தால் படகு கடலில் முற்றாக மூழ்கி சிதைவடையும் நிலை ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
இவற்றுக்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள்? என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
(யாழ்பாண சங்கதிகள்)