அமைதிக்கு பெயர் போன குமண தேசிய பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கி முழக்கங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரு பெரிய கும்பலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சோதனையில் சிக்கிய பொருட்களின் விபரங்கள் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..
காட்டு எருமை இறைச்சி:- 56 கிலோ
மானிறைச்சி:- 17 கிலோ
ஈரல் பகுதிகள்:- 16 கிலோ
கடலாமை முட்டைகள்:- 57
ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்த படகு, எஞ்சின் மற்றும் எரிபொருள் கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைக்காக லாகுகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.