கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம் நேற்று (ஏப்ரல் 12) காலை 10.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் பதில் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு, குறித்த அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.க. ஸ்ரீமோகனன்,மேலதிக அரசாங்க அதிபர் ( காணி)திரு.திருலிங்கநாதன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.வை.தவநாதன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் மேலதிக இணைப்பாளர் திரு.கோ.றூஷாங்கன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.