சுனாமி பேரழிவினாலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்களினாலும் நாட்டில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நினைவு நிகழ்வு இடம்பெற்றது
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (26.12) காலை 09..25 மணிக்கு அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்களினால் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சர்வமத ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது அனர்த்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூருவதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கு நல்லாசி வேண்டியும் அனர்த்த நிலமைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மார்கழி 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் தேசிய ரீதியாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.