கிளிநொச்சி மகா வித்தியாலய மூன்று குளவிக்கூடு தீக்கிரை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலுக்கமைய கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் காணப்பட்ட குளவிக்கூடு   அகற்றப்பட்டது.

நேற்று (05/02) காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிடத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்தமையால் 39மாணவர்கள் மூன்று ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய குளவிக்கூட்டினை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செயற்பாடுகளை மேற்கொண்டது

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலில் இராணுவத்தினரின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்று இரவு  குறித்த குளவிக்கூடு அகற்றப்பட்டது.

அதேவேளை பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட மற்றுமொரு குளவிக்கூடும் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article