கிளிநொச்சியில் மேலும் ஒரு இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி பாரதி புரத்தினை சேர்ந்த 20வயது இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஒயில் விற்பனை செய்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீர் விநியோகம் மற்றும் மலர்ச்சாலையில் பணியாற்றிய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த வகையில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு 11வது நாள் பெறப்பட்ட பீ.சீ.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே மலர்ச்சாலை இளைஞனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,

இவர்களது மாதிரிகள் அனுராதபுரம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Share this Article