கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபார நிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் பரிசோதனையின் முடிவில் எவருக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு நேற்றைய தினம் இதனோடு சம்மந்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 56 பிசிஆர் பரிசோதனைகளில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனைய 55 பேருக்கும் தொற்றில்லை. தொற்று உறுதி செய்யப்பட்டவரும் வவுனியா வடக்கு புளியங்குளத்தைச் சேர்ந்த நீர் விநியோகத்தில் ஈடுப்பட்ட வாகனத்தின் சாரதியாவர்.

Share this Article