கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் 47 வயதுடைய ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இன்று (11) உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் கட்டட நிர்மாணத்துறையில் பணியாற்றும் இவர் கடந்த 27ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில், சுகாதாரத் துறையினரால் சுயதனிமைப்படுத்தப்பட்டார். கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் இதுவரை மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.