கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (மே 25) காலை நெதர்லாந்து அரசின் 5320 மில்லியன் செலவில் திறந்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசின் இலகுக் கடன் நிதி உதவியில் பெண்களிற்கான சிகிச்சை கூடமாக அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி கொப்பங், நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண ஆளுனர் P.S.M. சார்ள்ஸ், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.