கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது

அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்குவதுடன், அவசர மருத்துவ மற்றும் உட்கட்டுமான வசதிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.

பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் 11 ஆவது கிலோ மீற்றரில் உள்ள பாலத்தை புனரமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சி வந்துள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள தற்காலிக இரும்புப் பாலத்தைப் பொருத்தும் பணிகளில் இந்திய இராணுவ பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள், இலங்கை இராணுவ பொறியியல் பிரிவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

Share this Article
Leave a comment