03.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி வானிலை அவதானிப்பு.
எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் புதிய ஒரு காற்றுச் சுழற்சிஉருவாகின்றது. இது எதிர்வரும் 11.12.2024 அன்று வலுவடைந்து வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலையில் இது ஒரு காற்று சுழற்சியாகவே உள்ளது. ஆனால் எதிர்வரும்நாட்களில் வங்காள விரிகுடாவில் நிகழும் வளிமண்டல நிலைமைகள் இதனைஒரு தாழமுக்கமாக மாற்றலாம். தற்போது இந்த காற்று சுழற்சியின் நகர்வு வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு அண்மையாக நகரும் என மாதிரிகள்காட்டுகின்றன. ஆனால் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்தமுடியும்.
இதன் காரணமாக
பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழைகிடைக்கும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்இந்த மழை நிலைமையைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
தற்போது எங்களுடைய காலநிலை பருவத்திற்கும் பயிர் பருவத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் வானிலை மாற்றங்கள்பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. காலப்போக்கில் இந்த வானிலை மாற்றங்கள் எங்கள் நாட்டின் உணவுற்பத்தியில்மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே மேற்படி விவசாயம் மற்றும் காலநிலை துறை சார்ந்தவர்கள்ஒன்றிணைந்து எங்கள் பயிர்ச்செய்கை பருவம் தொடர்பான ஆலோசனைகளைவிவசாயிகளுக்கு வழங்குவதன் ஊடாக திடீர் வானிலை மாற்றங்களால் விவசாயநடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும்.